மக்களின்
உரிமைகளுக்காக போராடிய ஒரு தலைவராவார். மேலாதிக்க வாதிகளால் படுகொலை
செய்யப்பட்டவர் தென்
மாவட்டங்களில் வசிக்கும் மக்கள்
ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை
நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக
இருந்தவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில்
உள்ள செல்லூர் கிராமத்தில் 1924 அக்டோபர் 9 ஆம் நாள் வேதநாயகம், ஞானசுந்தரி
தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஆசிரியராகவும்
வழக்கறிஞராகவும் பணியாற்றினார். தனது ஆரம்பக் கல்வியைத் தனது தந்தையாரிடம்
செல்லூரிலேயே கற்றார். அதன் பிறகு பரமக்குடியில் சி. எஸ். எம். பள்ளியில்
விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக்
கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார். பள்ளி வாழ்க்கையில்
சிறந்த கால்பந்து விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார்.
No comments:
Post a Comment