Monday, 5 August 2013

இரட்டைமலை சீனிவாசன்

இரட்டைமலை சீனிவாசன் 

 
தலித் மக்களுக்காக போராடிய போராளி திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் !!!!  
" நானும் டாக்டர் அம்பேத்காரும் நகமும்சதையாக இருந்து தலித்களுக்குபாடுபட்டோம் "

"இதர சமூகத்தவர்களும், சமயத்தவர்களும்நம்மை முன்னேற்ற வந்ததாக சொல்வதுஅவர்களின் சுயநலமாகும். நம்முடையஇடைவிடாத சுயமுயற்சியால் முன்னேறிவந்து கொண்டிருக்கிறோம் "
ரெட்டமலை சீனிவாசன்

இம்மானுவேல் சேகரன்




 மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தலைவராவார். மேலாதிக்க வாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்  தென் மாவட்டங்களில் வசிக்கும்  மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர்.



 மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தலைவராவார். மேலாதிக்க வாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்  தென் மாவட்டங்களில் வசிக்கும்  மக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுச்சியுற்றமைக்கும், அவர்கள் சமூக ரீதியான அடையாளத்தை நிறுவியதற்கும் ஓர் அரசியல் சக்தியாக அணி திரள்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர்.



வாழ்க்கைச் சுருக்கம்


இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள செல்லூர் கிராமத்தில் 1924 அக்டோபர் 9 ஆம் நாள் வேதநாயகம், ஞானசுந்தரி தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவரது தந்தை ஆசிரியராகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். தனது ஆரம்பக் கல்வியைத் தனது தந்தையாரிடம் செல்லூரிலேயே கற்றார். அதன் பிறகு பரமக்குடியில் சி. எஸ். எம். பள்ளியில் விடுதியில் தங்கி ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். உயர்நிலைக் கல்வியை இராமநாதபுரம் சுவார்ட்ஸ் பள்ளியில் படித்தார். பள்ளி வாழ்க்கையில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார்.

அயோத்தி தாசர்

அயோத்தி தாசர் 

 

அயோத்தி தாசர் :  தமிழ்நாடு) ஒரு சாதிக்கொடுமை எதிர்ப்பாளர், சமூக சேவகர், தமிழ் அறிஞர். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர். தலித் பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 நூற்றாண்டின் இறுதியில் தலித் மக்களின் முன்றேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவரமாக செயற்பட்டார். இவர் பெரியாருடனும் தொடர்பு பேணினார். அவரது இயற்பெயர் காத்தவராயன். அயோத்திதாசர் தமிழ், சித்த மருத்துவம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமையும் ஆங்கிலம், வடமொழி, மற்றும் பாலி போன்ற மொழியறிவும் பெற்று விளங்கினார்.

ப. ஜீவானந்தம்

ப. ஜீவானந்தம்








"ஜீவா" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட ப. ஜீவானந்தம் கம்யூனிச இயக்கத்தில் மிகவும் பிரபலமானவராகவும் அக்கட்சியின் அதிகார பூர்வ ஏடான "ஜனசக்தி" இதழ் ஆசிரியராகவும் இருந்தவர். இவர் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக இறங்கி பாடுபட்டதும், மகாத்மா காந்தியால் பாராட்டப்பட்டதும் அனைவரும் அறிந்த செய்தி.

சமவுரிமை போராளி அய்யன்காளி

சமவுரிமை போராளி  அய்யன்காளி







அய்யன் காளி திருவிதாங்கூர் மகானத்தில் தலித் சமுதாய விடுதலைக்காக பாடுபட்ட தலைவர். இவர் 28 ஆகத்து, 1863ல் திருவிதாங்கூரில் (கேரளா)திருவனந்தபுரத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெங்கனூரில், பெருங்காட்டுவிளா என்ற ஊரில் 7 பிள்ளைகளில் ஒன்றாக கூலி விவசாய குடும்பத்தில் அய்யன் என்பவருக்கு மகனாக பிறந்தார் அய்யன்காளி. இளவயதில் கட்டுடலும், அழகும், வலிமையும் நிறைந்தவராகவே வளர்ந்தார். அய்யன்காளி சிறுவனாக இருக்கும் போது தனது குடும்பத்தினரும், உறவினர்களும் உரிமை மறுக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுவதை உணர்ந்தார். புலையர் சாதியில் பிறந்த அவர்களுக்கு சாலையில் நடக்க அனுமதியில்லை. உடலை மறைக்க நல்ல உடையணிய அனுமதி மறுக்கப்பட்டது. செருப்பு போட அனுமதியில்லை. தலைப்பாகை கட்டக்கூடாது என பல அடக்குமுறைகளை

ஒண்டி வீரன்

ஒண்டி வீரன்





இந்தியா என்ற ஒரு நாடு உருவாதற்கு முன்பே இந்த மண்ணை மீட்க போராடிய தமிழர்களின் விவேகம், தமிழர்களின் போர்த் தந்திரம், வீரம் போன்றவைகளை கேட்டால் பூனை கூட புலியாக மாறிவிடும். அந்த அளவு வீரம் செறிந்தது.

ம. பொ. சிவஞானம்




ம. பொ. சிவஞானம்


History of Dr.Ma Po Si  
பிறப்பு 
1906ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் நாள், சென்னை ஆயிரம் விளக்கு.

அரசியல் 
உறுப்பினர், தமிழ் நாடு காரியக்கமிட்டி (1951-52)
துணைச் செயலாளர், சென்னை மாவட்டக் காங்கிரசுக் கமிட்டி(1936-37)
செயலாளர், சென்னை ஜில்லா காங்கிரசுக் கமிட்டி (1947-48)

தொழிலாளர் இயக்கம்
செயலாளர், சென்னை கள்ளிறக்கும் தொழிலாளர் சங்கம் (1934-38)
துணைத் தலைவர், சென்னை அச்சுத் தொழிலாளர் சங்கம் (1932-34)
துணைத் தலைவர், சென்னை இராயபுரம் கணேஷ் அலுமினியம் தொழிலாளர் சங்கம் (1937-38)

தியாகி சங்கரலிங்கனார்


தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்கனார்.....







தமிழ்நாடு பெயர் வரக் காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்கனார்.....

சங்கரலிங்க நாடார் என்று அறியப்படும் கண்டன் சங்கரலிங்கனார் மதராசு மாநிலம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட ஒரு போராளி. இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்.உலகில் அதிக நாட்கள் கொள்கைக்காக உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டவர். இவர் விருதுநகர் மாவட்டத்தை சார்ந்தவர்.


வாழ்க்கை

காமராசர் படித்த பள்ளியில் படித்த இவர் வணிகத்தில் புகுந்து காங்கிரசில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார். நாடார் சமூகத்திற்காக அபிவிருத்திச் கங்கத்தையும் துவக்கிய இவருக்கு ராசாசி உட்படப் பலருடன் தொடர்பு ஏற்பட்டது. கதர் விற்பனையில் ஆர்வம் செலுத்திய சங்கரலிங்கம் காந்தியுடன் தண்டியாத்திரையிலும் பங்கு கொண்டிருக்கிறார். பம்பாயில் வாழ்ந்த அவர் குடும்பத்தினரைப் பிரிந்து தனித்து வாழ்ந்து தன்னுடைய சொத்துக்களை விருதுநகரில் உள்ள பள்ளிக்கு எழுதி வைத்துவிட்டார். பிறகு விருதுநகர் ஆலக்கரையில் ஒரு ஆசிரமத்தை அமைத்துத் தங்கியிருந்தபோதுதான் ஆந்திர மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பொட்டி ஸ்ரீராமலு 1952 டிசம்பர் 15 அன்று உயிர் துறந்தார். இதையடுத்து ஆந்திர மாநிலம் உருவெடுத்தது. சங்கரலிங்கத்துக்கு இது ஒரு தூண்டுதலை ஏற்படுத்திய பாதிப்பிலும், ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் தமிழ்நாடு பெயர் சூட்டுவதற்காக போராட்டம் நடத்தியதின் தூண்டுதலிலும் உண்ணாவிரதத்தை நடத்த திட்டமிட்டார்

உண்ணாவிரதம்


காங்கிரஸ் அரசின் முன்பாக 1956 ஜூலையில் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தார் அவர். தனியாக மொழிவழி மாகாணம் வேண்டும். சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டவேண்டும். அரசியல் தலைவர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சாதாரண மக்களைப்போல் வாழவேண்டும். தேர்தல் முறையில் மாற்றம் வேண்டும். தொழில்கல்வி, இந்தியா முழுவதும் மதுவிலக்கு என்று பன்னிரெண்டு கோரிக்கைகளுடன் ஜூலை 27ந்தேதி சூலக்கரை மேட்டில் தனியாளாக உண்ணாவிரதத்தைத் துவக்கினார்.அப்போது அந்த இடம் விருதுநகரிலிருந்து தூரத்தில் ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியாக இருந்ததால் பொதுவுடமைக் கட்சியினரின் ஆலோசனையின்பேரில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.அப்போதிருந்த காங்கிரஸ் அரசு சங்கரலிங்கனாரின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. அதற்குள் சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம் பல சலசலப்புகளை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டது. ம.பொ.சிவஞானம்., அண்ணாத்துரை, காமராசர், ஜீவானந்தம் உட்படப் பல தலைவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லிக் கோரிக்கை விடுத்தனர். இருந்தும் உண்ணாவிரதம் நிறுத்தப்படவில்லை.நாளாக நாளாக சங்கரலிங்கனாரின் உடல்நிலை மோசமானது. விருதுநகருக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் அண்ணா. அப்போது தொடர்ந்து மூன்று கடிதங்களை எழுதினார் சங்கரலிங்கனார். “பொதுஜனங்களின் விருப்பத்திற்கு மாறாக தவறான வழியில், கண்மூடித்தனமாகப் போய்க் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி ஒழிந்தே தீரும். அறிவுத் திறன் இருந்தால் திருத்திக்கொள்ளட்டும்” என்று ‘எச்சரிக்கையுடன்’ எழுதியிருக்கிறார்.76 நாட்கள் வரை அவருடைய உண்ணாவிரதம் தொடர்ந்தது. தமிழகத்தில் அப்போதிருந்த தின இதழ்களில் இது குறித்த செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டிருந்தன.

மறைவு

அக்டோபர் 10ந் தேதி அன்று நிலைமை மோசமாகி சங்கரலிங்கனார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். 13.10.1956 அன்று அவருடைய உயிர் பிரிந்தது.அப்போது சென்னை மாகாணத்தில் இந்தச் செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சென்னை நகரக் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். மதுரை எர்ஸ்கின் மருத்துவமனையிலிருந்த சங்கரலிங்கனாரின் உடல் மதுரையில் அடக்கம் செய்யப்பட்டபோது பல கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரை அடக்கம் செய்வதில் துணை நின்றவர்கள் பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள்.

"தமிழ்நாடு பெயர் மாற்றம்"

சங்கரலிங்கனாரின் ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டுவது குறித்த கோரிக்கைக்கு அவருடைய மறைவுக்குப் பிறகு அழுத்தம் கொடுக்கப்பட்டு பல இயக்கங்கள் அந்தக் கோரிக்கைகளை முன்வைத்தன. 1962 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் ‘தமிழ்நாடு’ கோரிக்கைக்காக தனி மசோதாவே கொண்டுவந்தபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 1964 சனவரியில் சென்னை மாநிலச் சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் சூட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது. 1967ல் ஏப்ரல் 14 அன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ‘தமிழக அரசு’ ஆக மாறியது. 1968 சூலை 18ல் சென்னை மாநிலத்தை ‘தமிழ்நாடு’ ஆகப் பெயர் மாற்றம் செய்யும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 23.11.1968ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதையடுத்து 1.12.1968ல் தமிழ்நாடு முழுக்கப் பெயர் மாற்றம் விழாவாகக் கொண்டாடப்பட்டபோது "சங்கரலிங்கனாருக்கு நன்றியும் வணக்கமும்" தெரிவிக்கப்பட்டது.

சு.ப தமிழ்ச்செல்வன்








பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன்
1967 - 2.11.2007

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.

திருப்பூர் குமரன்

திருப்பூர் குமரன்

 





திருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன். இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

மாவீரன் அழகு முத்துக்கோன்

மாவீரன் அழகு முத்துக்கோன்






தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய
மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது. அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள். ``எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம்' என்றால் பீரங்கிகள் முழங்கும்.

அஞ்சலை அம்மாள் -கடலூர்

 அஞ்சலை அம்மாள் -கடலூர்


இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு தியாகங்கள் பல புரிந்த வீரர்கள் பற்றிய எல்லா விவரங்களும் கிடைப்பது என்பது அரிதுதான். எத்தனையோ தியாகிகளின் வரலாறு கால ஓட்டத்தில் காற்றோடு காற்றாகக் கலந்து வெளியில் தெரியாமலே பொய்விட்டது. வேறு சிலரது வரலாறோ பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படாத காரணத்தாலேயே மறக்கப்பட்டும் விட்டது. ஒரு நாட்டின் தியாக வரலாறு முறைப்படி அரசாங்கத்தின் முத்திரையோடு பதிவு செய்யப்பட வேண்டும். அப்படி பதிவு செய்யப்பட்ட தியாகிகளை மக்கள் ஆண்டுதோறும் நினைவுகூர வேண்டும். குறைந்த பட்சம் சுதந்திர நாள், குடியரசு நாள் போன்ற தேசிய நாட்களிலாவது அவர்களது நினைவுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த வேண்டும். அப்படி வரலாற்றின் ஏடுகளில் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும், பெருமளவு மக்கள் மத்தியில் பிரபலமாகாத சில பெயர்களில் கடலூர் அஞ்சலை அம்மாளும் ஒருவர்
. இவரது கணவரும் ஒரு தியாகி. இவரது மகளும், மருமகனும்கூட தியாகிகள். இப்படி குடும்பமே தியாகிகள் குடும்பமாக இருக்கும் ஒருசிலரில் அஞ்சலை அம்மாள் குடும்பமும் ஒன்று. 

தீரன் சின்னமலை

தீரன் சின்னமலை






இளமைப்பருவம்:
ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் வட்டம் மேலப்பாளையம் என்னும் ஊரில் பயிரன் குலத்தில் 17.4.1756 அன்று பிறந்தவர் சின்னமலை. பெற்றோர் இரத்தினச் சர்க்கரை- பெரியாத்தா தம்பதியினர். அவர்களின் ஐந்து ஆண்மக்களில் இரண்டாவது குழந்தை சின்னமலை. இளம்பருவத்தில் தம்பாக்கவுண்டர் என்று அழைக்கப்பட்டார். பள்ளிப் பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். அவர்கள் பரம்பைரயில் அனைவருக்கும் ‘சர்க்கரை’ என்பது பொதுப்பெயர். ‘புவிக்கும் செவிக்கும் புலவோர்கள் சொல்லும் கவிக்கும்’ இனிமை செய்ததால் சர்க்கரை என பெயர் பெற்றார்களாம். இளம்வயதிலேயே தம்பியர் பெரிய தம்பி கிலேதார் ஆகியவர்களோடு மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.

மருது பாண்டியர்

மருது பாண்டியர்




மருது பாண்டியர்கள்.இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார்த் தேவர் என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர்

வேலுநாச்சியார்


இராணி வேலுநாச்சியார்  பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி 

ஆவாவீர மங்கை வேலு நாச்சியார்.. 

இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள ஊர். வேலுநாச்சியார் பிறந்தது இங்கேதான். 

தந்தை முத்து விஜயரகுநாதசெல்லத்துரை சேதுபதி. 

இராமநாதபுர மன்னர். தாய் முத்தாத்தாள் நாச்சியார்.

 இவர்களின் ஒரே பெண் குழந்தை வேலுநாச்சியார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது இந்தக் காலத்தில் நாம் சொல்லும் பழமொழி. ஆனால் அந்தக் காலத்தில் அதற்கு உதாரணமாய் இருந்திருக்கிறார் வேலுநாச்சியார். சிறுவயதில் வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.

மார்சல் ஏ. நேசமணி

மார்சல் ஏ. நேசமணி







நேசமணி விளவங்கோடு வட்டத்தை சார்ந்த பள்ளியாடி என்னும் இடத்தில் 12, சூலை 1895 ம் ஆண்டு அப்பாவு-ஞானம்மாள் தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்து வளர்ந்தார். தன் தாயின் ஊரான கல்குளம் வட்டத்தை சார்ந்த மாறாங்கோணம் என்னும் இடத்தில் பிறந்தார்.

தோழர் தமிழரசன்

தோழர் தமிழரசன்

 

  தோழர் தமிழரசன்

தமிழ் தேசியம் தழைத்தோங்கிய பகுதியைச் சேர்ந்தவன் என்ற முறையில் தமிழ் தேசியம் பற்றிய சில நிகழ்வுகளை இங்கு பதிவு செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன். இந்த நிகழ்வுகள் கடந்த காலங்களில் ஊடகங்களில் சரியாக வெளிக்கொணரப்படவில்லை என்பது மட்டும் அல்லாமல் இதனை திரித்து பொய்க்கதை எழுதி மறக்கடித்தப் பெருமையும் வெகுஜன ஊடகங்களுக்கு உண்டு.


அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அஞ்சல் மதகளிர் மாணிக்கம் எனும் கிராமத்தில் துரைசாமி – பதூசி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 1945 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு ஒரு தங்கை உண்டு
கோவையில் B.E. ( Chemical Engr) வேதியியல் பொறியியல் படித்தார்.

கலியபெருமாள்

செங்களப்போராளி புலவர் கு.கலியபெருமாள்.





கடந்த May 16 2011 திங்கள் அன்று புலவர் கு.கலியபெருமாள் அவர்களுக்கு மணிமண்டபம் திறப்புவிழா நடந்தது. தமிழகத்தின் மறக்கடிக்கப்பட்ட புரட்ச்சியாளர்களில் புலவரும் ஒருவர். ஆரம்பத்தில் பெரியார் ஆதரவாளராக இருந்து, பிறகு கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிர்சங்க தலைவராகினார்.